ஊரடங்கு உத்தரவை விடுமுறை காலமாக கருதக் கூடாது

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரஸ் குறித்து நடிகர் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தான் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது என்றும் இது கொண்டாட்டத்திற்கான விடுமுறை அல்ல என்றும் நம் அனைவருக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது என்றும் அரசு எவ்வளவோ முயற்சிகளை எடுத்துமே மக்கள் வெளியில் கூட்டம் கூட்டமாக இருப்பதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

 

கொரொனா வைரஸ் பரவுவதற்கு நமது அலட்சியமும், அறியாமையோ காரணமாக இருந்திட வேண்டாம் எனவும் அவசியம் இல்லாமல் யாரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

தேவையில்லாத பயணங்களை தவிர்க்கவும், அரசு கூறும் பாதுகாப்பான விதிமுறைகளை பின்பற்றவும் ஆரோக்கியமாக வாழ்வோம், வருமுன் காப்போம் என சூர்யா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.


Leave a Reply