14 மணி நேரம் தொடர்ச்சியாக பாடிவரும் இசையமைப்பாளர்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Arrangemets


மக்கள் ஊரடங்கு முன்னிட்டு சென்னையில் வீடுகளில் உள்ள மக்களை மகிழ்விக்கும் வகையில் இசையமைப்பாளர் சத்யன் என்பவர் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக 14 மணிநேரம் நேரலையில் பாடியுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள தனது ஒலிப்பதிவு கூடத்தில் இருந்தபடியே இவர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் நேரலையில் பாடியுள்ளார். ஃபேஸ்புக் கமெண்ட் பகுதியில் மக்கள் கேட்கும் பாடல்களை பாடும் சத்யன் அவ்வப்போது சிறு சிறு இடைவெளி எடுத்துக்கொண்டு நேர இசை நிகழ்ச்சியை தொடர்ந்து வருகிறார்.


Leave a Reply