மதுரையிலேயே வசித்து வரும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 9 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 3 பேருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

மூவரையும் தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழகம் முழுவதும் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 12,619 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதுவரை வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு மட்டுமே கொரொனா இருந்து வந்த நிலையில் மதுரையில் வசிக்கும் ஒருவருக்கு கொரொனா பாதிப்பு இருப்பது தெரியவந்து இருப்பதையும் அவர் குறிப்பிட்டார். இவருக்கு இதயக்கோளாறு உள்ளிட்டவையும் உள்ளதால் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


Leave a Reply