கொரொனா வேலைஇழப்பு: தின கூலி தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் நிவாரணத் தொகை

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா தொடர்பாக விதிக்கப்பட்ட தடையால் வேலைவாய்ப்பை இழந்து இருக்கும் தின கூலி தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

 

15 லட்சம் தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் 20 லட்சத்து 37 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்கள் என மொத்தம் 35 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தில் 23 பேருக்கு கோர பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இதில் 9 பேர் குணம் அடைந்து விட்டதாகவும் முதல்வர் கூறினார்.

 

முன்னதாக தடைகளால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தவர்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் உதவிகள் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார்.


Leave a Reply