போனில் பேசியபடி அலட்சியமாக உடல் வெப்பத்தை பரிசோதித்த பணியாளர் பணியிடை நீக்கம்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கர்நாடக மாநிலம் தும்கூர் ரயில் நிலையத்தில் செல்போனில் பேசியபடி அலட்சியமாக ரயில் பயணிகளின் உடல் வெப்பத்தை பரிசோதித்த சுகாதார பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நரசிம்மமூர்த்தி என்று அந்த பணியாளர் இருக்கையில் அமர்ந்து கொண்டு கை பேசியில் பேசிய படியே வெப்பமானியை கொண்டு பயணிகளின் உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவின.

 

இது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து நரசிம்ம மூர்த்தியை கர்நாடக மாநில சுகாதாரத்துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது.


Leave a Reply