10 வயது சிறுமிக்கு பாலியல் கொடூரம்! இளைஞர் கைது!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னை அருகே பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்த இளைஞன் கைது செய்யப்பட்டான். தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுமி நேற்று நள்ளிரவில் கழிவறை செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுமி வீட்டிற்குள் வரவில்லை.

 

இதனால் கவலை அடைந்த பெற்றோர் வெளியே வந்து சிறுமியை தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பெற்றோர் தகவல் அளித்தனர். காவல்துறையினரும் அப்பகுதி முழுவதும் தேடினர். அப்போது வீட்டின் பின்புறம் பலத்த காயங்களுடன் சிறுமி உயிருக்குப் போராடியவாறு மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

 

சிறுமி மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் சுரேஷ் என்ற 29 வயது இளைஞரை கைது செய்துள்ளனர். நள்ளிரவில் கழிவறைக்கு செல்ல வந்த சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கி சென்ற சுரேஷ் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக தெரிகிறது.

 

அப்போது சிறுமி சப்தம் போடவே அவரை தாக்கி மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.மதுபோதையில் செல்போனில் ஆபாசபடம் பார்த்த போதே சிறுமியைத் தூக்கிச் சென்றதாக கைதான சுரேஷ் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது.


Leave a Reply