--- --:--:-- --

டிக் டாக் செய்ததால் ஆத்திரமடைந்த காதல் கணவன்! அரங்கேறிய கொடூரம்!

7.1

மதுரை திருநகர் சூறாவளி மேட்டை சேர்ந்தவர் அசோக். இவர் அழகு கலை நிபுணரான சுதா என்ற பெண்ணை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தையும், 4 வயதில் ஆண் குழந்தையும் உள்ள நிலையில் டிக் டாக் மீது அதிக நாட்டம் கொண்ட சுதா, நாள் பொழுதையெல்லாம் டிக்டாக்கில் அளித்து வந்துள்ளார்.

 

காதல் பாடல்களுக்கு ரொமான்ஸ் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்த சுதாவுடன் பல ஆண்கள் டூயட் செய்துள்ளனர். இதனை பார்த்த நண்பர்கள் சிலர் அசோக்கிடம் தெரிவிக்க வெறுப்படைந்த அவர் மனைவியிடம் டிக்டாக் செய்வதை நிறுத்தும்படி கோரியுள்ளார். ஆனால், அசோக் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றித் திரிந்ததால் அதனை அலட்சியப்படுத்தி வந்துள்ளார்.

 

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே கணவரிடம் தெரிவிக்காமல் வேலை நிமித்தமாக சுதா கோவைக்கு சென்ற நிலையில், இரண்டு குழந்தைகளையும் தனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டு வந்துள்ளார் அஷோக். பின்னர் வீடு திரும்பிய சுதா செவ்வாய்க்கிழமையன்று குழந்தைகளை அழைத்து வரும்படி கூற தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றி உள்ளது.

அப்போது கோபமடைந்த அஷோக் மனைவியை தாக்கி கீழே தள்ளி சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார். அதன்பிறகு தலைமறைவான அவரை வலைவீசி தேடி வந்த திரு நகர் போலீசார் திருப்பரங்குன்றம் அருகே பதுங்கியிருந்த அசோக்கை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தன.

 

அசோக்கிற்கு வேலை எதுவும் கிடைக்காததால் மனைவியின் சம்பாத்தியம் மூலம் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இதனால், தன்னை மதிக்காமல் டிக்டாக்கில் மூழ்கிய சுதா அடிக்கடி வெளியூர் சென்று வந்ததால் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

மனைவியின் டிக் டாக் வீடியோக்களை பார்த்த நண்பர்கள் கேலி செய்வதால் அதனை பலமுறை தவிர்க்க கோரியும் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வந்ததால் மனைவி மீது வெறுப்படைந்ததாகவும் சம்பவத்தன்று நடந்த தகராறில் போது விவாகரத்து தர சொல்லி கேட்டு வாக்குவாதம் செய்ததால் கோபத்தில் சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடியதாக அசோக் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon