--- --:--:-- --

டாஸ்மாக் கடையில் சோசியல் டிஸ்டன்ஸ்! 1 மீட்டர் இடைவெளியில் நிற்கும் குடிமகன்கள்!

8

கொரொனா அச்சுருத்தல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வருவோர் ஒரு மீட்டர் இடைவெளியில் நிறுத்தப்பட்டு சமூக விலகலை கடைப்பிடிக்க வைக்கப்படுகின்றனர். கொரொனா வைரஸ் பரவுவதை தடுக்க சோசியல் டிஸ்டன்ஸ் எனப்படும் சமூக விலைகளை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

தனி நபர்களிடம் இருந்து ஒரு மீட்டர் இடைவெளியில் இருப்பது நலம் என கூறப்படும் நிலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மருத்துவர்களின் அறிவுரை அப்படியே பின்பற்றப்பட்டுள்ளது. மதுபானம் வாங்க வருவோர் ஒரு மீட்டர் இடைவெளியில் இருக்கும்படி வரிசையாக கோடுகள் வரையப்பட்டுள்ளன.

 

கொரொனா அச்சுறுத்தல் காரணமாக நீதிமன்ற கோடைகால விடுமுறையை முன்கூட்டியே வழங்குமாறு தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கறிஞர்கள் அளித்திருக்கும் மனுவில் கோடை விடுமுறையை முன்கூட்டியே ஏப்ரல் மாதம் வழங்கினால் தொற்று ஏற்படும் வாய்ப்பு குறையும் என தெரிவித்துள்ளனர்.

 

இதற்கு பதிலாக மே மாதத்தில் நீதிமன்றப் பணிகளை தொடரலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon