கொரோனா! நாளை மறுநாள் பால் விநியோகம் நிறுத்தம்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழகத்தில் நாளை மறுநாள் பால் வினியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரொனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் மோடி சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ளார். மக்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வெளியே வரவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இந்நிலையில் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக 22ஆம் தேதி பால் வினியோகம் முழுவதும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக நாளை வழக்கத்தைவிட கூடுதல் பால் பாக்கெட்டுகளை முகவர்கள் விநியோகம் செய்ய உள்ளதாகவும் பொதுமக்கள் தேவையான அளவு பால் பாக்கெட்டுகளை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளுமாறும் பால் முகவர்கள்தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

கொரானா பரவலை தடுக்கும் பரீட்சார்த்த முயற்சியாக வரும் 22-ந் தேதி, மக்கள் ஊரடங்கு அமல்படுத்தி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடு முழுவதும் மக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அழைப்பு விடுத்துள்ளார்.

 

மார்ச் 22 அன்று ஒரு நாள் மட்டும் மக்களே ஊரடங்க அமல்படுத்திக் கொள்ள வேண்டும். அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.மக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளவேண்டும்.

 

அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே வர வேண்டும் .காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மக்கள் ஊரடங்கு அமலாவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்.

 

கொரானா அச்சத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம். அத்தியாவசிய பொருட்கள், மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் அதை தவிர்க்க நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.


Leave a Reply