நிர்பயா குற்றவாளி மீண்டும் கருணை மனு!
நிர்பயா பாலியல் குற்றவாளியான முகேஷ் தன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நிர்பயா சம்பவம் நடைபெற்ற அன்று தான் டெல்லியில் இல்லை என்றும் எனவே தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் முகேஷ் பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
டெல்லி காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என வாதிட்டார். இதனை தொடர்ந்து முகேஷின் மனு ஏற்புடையது அல்ல எனக் கூறி அதனை தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார். இதேபோல மற்றொரு குற்றவாளியான பவன்குமாருக்கு நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் போது தான் மைனராக இருந்ததாகவும் இதனால் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
இதற்கிடையே மற்றொரு குற்றவாளியான அக்ஷய் குடியரசுத் தலைவருக்கு மீண்டும் கருணை மனு அனுப்பியுள்ளார். இந்த மனுவை டெல்லி அரசு மூலம் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




