கொரோனாவை தடுக்க போர்க்கால நடவடிக்கைகள் தேவை

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரஸ் பரவுவதை பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் வருமுன் காப்போம் என்றும் சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு தெரிவித்துள்ளார்.

 

கொரொனா பற்றிய அறிவியல் ஆதாரமற்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். வதந்திகளை பரப்ப கூடாது எனவும் அதே நேரத்தில் உண்மையை மறைக்க கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.


Leave a Reply