சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கிரிஸ்டோபர்! அடித்து உதைத்த பொதுமக்கள்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இருவூர் எம்ஜிஆர் புரத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் சூலூர் அண்ணமலை வீதியில் மோனிஷா அழகு நிலையம் என்ற பெயரில் பெண்களுக்கான ஒப்பனை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக கிறிஸ்டோபர் அந்த பகுதியில் இருக்கும் 10 முதல் 15 வரை உள்ள சிறுமிகளை தனிமையில் அழைத்து வந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

 

இதனை அறிந்து திங்கள்கிழமை சிறுமி ஒருவரின் குடும்பத்தினர் கிறிஸ்டோபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கடையை மூடி விட்டு கிறிஸ்டோபர் சென்றுவிட்டார். இந்த விவகாரம் மெல்ல அந்த தெரு முழுவதும் கசிந்த நிலையில் அவர்கள் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.

 

செவ்வாய்க்கிழமை கடையை திறக்க கிறிஸ்டோபர் வருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவரது தாய், மனைவி, சகோதரி என குடும்பத்தினர் அனைவரும் வந்து அந்த பகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்டு சமாதானம் பேச முயன்றுள்ளனர். ஆனால் கிறிஸ்டோபர் நேரில் வந்து தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கூறியதால் குடும்பத்தினர் அவருக்கு போன் செய்து வரவழைத்தனர்.

கிறிஸ்டோபர் வந்ததும் அவரை அந்த பகுதி மக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனை எதிர்பார்க்காத கிறிஸ்டோபரின் குடும்பத்தினர் அங்கிருந்தவர்களிடம் கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்பு கேட்டு அவரை மீட்டு அழைத்து சென்றனர்.

 

இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் எவரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முன் வராததால் கிறிஸ்டோபர் குடும்பத்துடன் தப்பிச் செல்லும் நிலை உண்டானது.


Leave a Reply