கொரானாவை தடுக்க யோசனை கூறினால் பரிசு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் யோசனைகளை கூறினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கி உள்ளதால் அதனை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

இந்த நிலையில், கொரொனா வைரஸ் பரவலை தடுக்க யோசனைகள் அளிக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஆரோக்கியமான உலகத்திற்கே புதிய யோசனைகளை பயன்படுத்த நினைப்பதாகவும், நிறைய பேருக்கு கொரொனா வைரஸ் பரவலை தடுக்க தொழில்நுட்பம் சார்ந்த யோசனைகளை வழங்கி வருவதாகவும் கூறியுள்ளார்.

 

அவ்வாறு ஆலோசனைகளை வழங்குபவர்கள் பிரதமர் அலுவலகத்துடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும் டுவிட்டரில் மோடி குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply