தண்ணீருக்காக கிணற்றில் குதித்த சிறுத்தை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மத்திய பிரதேசத்தில் கிணற்றில் விழுந்த சிறுத்தை கட்டில் மூலம் மீட்கப்பட்டது. சிவபுரி என்ற இடத்தில் தண்ணீர் தேடி வந்த சிறுத்தை ஒன்று ஆழமான கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனைக்கண்ட கிராமத்தினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

 

அங்கு வந்த வனத்துறையினர் நீண்ட கயிற்றில் ஏணியை உருவாக்கி அதில் கட்டிலை கட்டி சிறுத்தை அருகில் கொண்டு செல்ல அந்த சிறுத்தையும் சமத்தாக அமர்ந்து கொண்டது. பின்னர் இரு புறமும் அதனை இழுத்து பிடித்து சிறுத்தையை கிணற்றில் இருந்து மீட்டனர். வெளியில் வந்த சிறுத்தை வனத்தை நோக்கி ஓடி விட்டது.


Leave a Reply