கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழகத்தில் கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

 

கொரானா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 125 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்திலும் இதன் தாக்கம் தென்படத் தொடங்கியுள்ளது. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கொரானா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கையாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். இதன்படி அனைத்து கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு இடங்கள், விளையாட்டு அரங்கங்கள், நீச்சல்குளங்கள், சுற்றுலா இடங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தையும் இன்று முதல் மார்ச் 31-ந் தேதி வரை மூட உத்தரவிட்டார். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள், அறிவுரைகளையும் வழங்கியிருந்தார்.

 

முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து, அவற்றை செயல்படுத்துவது பற்றியும், கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய தலைமைச் செயலாளர், தமிழக அரசின் அறிவிப்புகளை கண்டிப்புடன் செயல்படுத்த உத்தரவிட்டு, பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.


Leave a Reply