பைக்குக்கு சீட் பெல்ட் அணியாததால் அபராதம்…! குழப்பமடைந்த உரிமையாளர்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த இரு சக்கர வாகன உரிமையாளருக்கு சீட் பெல்ட் அணியவில்லை என சென்னை போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்த வினோத நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

 

அரியத்தூரை சேர்ந்த சரவணன் என்பவரின் செல்போனுக்கு கடந்த 15 ஆம் தேதி சென்னை மடிப்பாக்கம் போக்குவரத்து போலீசாரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது.

 

அதில் சரவணனின் இருசக்கர வாகன பதிவு எண் குறிப்பிடப்பட்டு செந்தில்குமார் என்பவர் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குழப்பமடைந்த சரவணன் களம்பூர் காவல் நிலையத்தில் தபால் மூலமாக புகார் அளித்தார்.