அரசியலில் நான் போட்ட புள்ளி சுழலாகி சுனாமியாக மாறும்… அதிசயம், அற்புதம் நடப்பது நிச்சயம்..! அடித்துக் கூறுகிறார் ரஜினி?

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


தமிழக அரசியலில் தாம் போட்ட புதுப்புள்ளி சுழலாகி சுனாமியாக மாறும்; அதிசயம், அற்புதம் நிச்சயம் நடக்கும் என ரஜினிகாந்த் பேசி, தமது அரசியல் பிரவேசம் நிச்சயம் உண்டு என்பதைப் போல் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.

 

சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தமது அரசியல் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை தெளிவுபடுத்தினார். தாம் முதல்வராக மாட்டேன் என்றும் ஆட்சிக்கு ஒரு தலைமை, கட்சிக்கு ஒரு தலைமை என இரட்டைத் தலைமை, இளைஞர்களுக்கு வாய்ப்பு என்றெல்லாம் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டு, மக்களிடையே கொண்டு செல்லுங்கள். மாற்றம், புரட்சி உண்டாகட்டும். அப்போ அரசியலுக்கு வருகிறேன். இப்போது தான் அரசியலுக்கு வர சரியான தருணம். ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் நிகழ்வது நிச்சயம். இப்போ இந்த சந்தர்ப்பத்தை விட்டால் இனி எப்போதும் கிடைக்காது என்றெல்லாம் ரஜினி கூறியது தமிழக அரசியலில் விவாதமாக மாறி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

 

இந்நிலையில் பிரபல ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே நடத்தும் யூ டியூப் சேனலின் முதலாம் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்று பேசுகையில், தமது அரசியல் வருகை ஏன் டிஸ்டர்ப் பண்றது எனக்கு தெரியும் நான் மெல்லமாய் போகிறேன் நேரத்திலேயே நிச்சயம் என்பது போல் பேசி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த விழாவில் ரஜினி பேசியதாவது:

 

எம்.ஜி.ஆர் திமுகவில் 25 ஆண்டுகள் இருந்தார். ரொம்பவும் நல்லவர் நான் மதிக்க கூடியவர். கலைஞர் முதலமைச்சர் ஆவதற்கு எம்.ஜி.ஆர் தான் காரணம். கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆரை, கணக்கு கேட்டதற்காக திமுகவிலிருந்து நீக்கினார்கள். அப்போது ஏற்பட்ட அலையில் முதல்வரானார் எம்ஜிஆர் . திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் தூக்கி வீசப் பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலை காரணமாகவே எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனார்.

 

அப்படித்தான், 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலையால் ஒரு அனுதாப அலை ஏற்பட்டது. அதன் காரணமாக ஜெயலலிதா முதலமைச்சரானார். எனவே அரசியலில் எலை என்பது ரொம்ப முக்கியமானது. நானும் கொஞ்ச நாளைக்கு முன் அரசியலில் புதுப் புள்ளி போட்டேன். அந்தப் புள்ளி இப்போது சுழலாக உருவாகியுள்ளது. அதனை மாபெரும் அலையாக மாற்ற ரஜினிகாந்த் போகணும்.. ரஜினி ரசிகர்கள் போகணும்.. தேர்தல் நெருங்க நெருங்க அந்த அலை சுனாமியாக மாறும். அது ஆண்டவன் கையில் உள்ளது. அது நிச்சயம் உருவாகும். தமிழக அரசியளர் அதிசயமும், அற்புதமும் நடப்பதும் நிச்சயம் என்றார் ரஜினி . இந்த விழாவில் பேசிய ரஜினி, எல்லாருடைய பேச்சைக் கேட்பவர்களும் உருப்vட மாட்டார்கள்;யாருடைய பேச்சையும் கேட்காதவர்களும் உருப்பட மாட்டார்கள் என ஒரு பஞ்ச் டயலாக் பேசி, என் பேச்சை கேளுங்கள்; உருப்படுவீர்கள் என்பது போல பஞ்ச் வைத்தார். இதனால் அரசியலுக்கு ரஜினி வருவாரா? மாட்டாரா? என்ற சஸ்பென்ஸ் நீடிக்கவே செய்கிறது .அவர் பாணியில் எல்லாம் ஆண்டவன் கையில் உள்ளது.


Leave a Reply