இந்தியாவில் கொரானா பலி எண்ணிக்கை 3 ஆனது..! மும்பையைச் சேர்ந்த 64 வயது முதியவர் உயிரிழப்பு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இந்தியாவில் கொரனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயது முதியவர் உயிரிழந்தார்.

 

உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரானா வைரஸ் தாக்குதலுக்கு , உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் பாதியளவு சீனாவில் மட்டும் என்றாலும், தற்போது அந்நாட்டில் பீதி குறைந்து, பலி எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

 

ஆனால் இந்த கொரானாவால் இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் தினமும் பலி எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகள் பலவும் மட்டுமின்றி உலகின் 145 நாடுகளில் கொரானா பாதிப்பு அலறவைத்துள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் இப்போது பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

 

இந்தியாவில் கொரானா பாதிப்பு இதுவரை 125 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த வாரம் கர்நாடகாவில் ஒருவரும், டெல்லியில் ஒருவரும் பலியான நிலையில், மும்பையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயது முதியவர் இன்று பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.


Leave a Reply