குழந்தைகளையும் தாக்கும் கொரொனா? சீனா ஆய்வு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


குழந்தைகளை கொரொனா அதிகமாக தாக்குவதில்லை எனவும், குழந்தைகளை கொரொனா வைரஸ் தாக்கி உயிர் இழப்பது இல்லை என்கிற செய்திகள் சற்று ஆறுதல் தந்து கொண்டிருந்த சூழலில், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை குழந்தைகளையும் கொரொனா தாக்கும் எனவும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

 

கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்வி நிறுவனங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களை மார்ச் 31-ந் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

 

உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரானா வைரஸ் தாக்குதலுக்கு , உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் பாதியளவு சீனாவில் மட்டும் என்றாலும், தற்போது அந்நாட்டில் பீதி குறைந்து, பலி எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

 

இந்நிலையில் அது குறித்த ஆய்வு சீனாவில் நடக்கிறது எனவும் அவர்களும் கொரொனா வைரசை மற்றவர்களுக்கு பரப்புவார்கள் எனக் கூறியுள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்.


Leave a Reply