உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு நியமன எம்.பி., பதவி ஏன்? சர்ச்சையை கிளப்பும் எதிர்க்கட்சிகள்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து நான்கு மாதங்களுக்கு முன் ஓய்வுபெற்ற ரஞ்சன் கோகாய், மாநிலங்களவை நியமன எம்.பி.,யாக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை நீதித்துறையின் நம்பகத்தன்மையை கேலிக்கூத்தாக்கி விடும் என எதிர்க் கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி ஓய்வு பெற்றார். இவர் தலைமை நீதிபதியாக இருந்தபோது தான், அதி முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு வழக்குகளில் முக்கிய தீர்ப்புகளை வழங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில் அயோத்தி வழக்கு, ரபேல் விமான பேர வழக்கு, முத்தலாக் வழக்கு, காஷ்மீரில் 370 -வது பிரிவை நீக்குவதற்கு எதிரான வழக்கு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

 

இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வழங்கிய தீர்ப்புகள் அனைத்தும் மத்திய அரசுக்கும், பாஜகவுக்கும் சாதகமாக இருந்ததாக ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், அவர் ஓய்வு பெற்ற நான்கு மாதங்களில் மாநிலங்களவை நியமன எம்பியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

 

மாநிலங்களவையில் மொத்தமுள்ள 250 உறுப்பினர்களில் 238 பேர் பல்வேறு மாநிலங்களிலிருந்து எம்எல்ஏக்கள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மீதி 12 பேர் மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுவார்கள். இது ஒரு கவுரவ பதவியாகும். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை இப்பதவியில் நியமிப்பது வழக்கம். ஆனால் இந்திய சுதந்திர வரலாற்றில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் நியமன எம்.பி.,யாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் 1998 உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற ரங்கநாத் மிஸ்ரா, மாநிலங்களவை எம்.பி., ஆக எம்.எல்.ஏ.க்கள் மூலம் காங்கிரஸ் சார்பில் தேர்வு செய்யப்பட்டது சர்ச்சையானது.1984ல் இந்திரா காந்தி படுகொலையின் போது டெல்லியில் சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கை ரங்கநாத் மிஸ்ரா விசாரித்தவர். சீக்கியர் படுகொலை வழக்கை விசாரித்த அவருக்கு பரிசாக காங்கிரஸ் எம்.பி பதவி வழங்கி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நியமன எம்.பி பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதும்கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்தபோது மத்திய அரசுக்கும், பாஜகவுக்கும் சாதகமான தீர்ப்புகளை வழங்கியதற்கு பரிசாக எம்பி பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்ற விமர்சனங்களையும் பலரும் முன்வைத்துள்ளனர். இதன் மூலம் நீதித்துறையின் மீதான நம்பிக்கை கேலிக்கூத்தாகியுள்ளது எனவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளனர் மத்திய முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா, இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டதன் மூலம், நீதித்துறை என்னும் பொன் இடம் நடுரோட்டில் போட்டு உடைக்கப்பட்டுள்ளது. நீதிதேவதையின் தராசு சுக்கு நூறாக்கப்பட்டுள்ளது. துணியால் ர்டப்பட்ட அவள் கண்கள் நிரந்தர குருடாக்கப்பட்டுள்ளது.

 

எளியவருக்கு நீதி வழங்கிய பேனா முனை நசுக்கப்பட்டுள்ளது.நாட்டின் கடைக்கோடி மனிதனின் நம்பிக்கைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. இவரால் வழங்கப்பட்ட தீர்ப்புகள், காஷ்மீர் 370வது பிரிவு நீக்கம், முத்தலாக் தடை சட்டம், அயோத்தி தீர்ப்பு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், வழக்கு தகவல் உரிமை அறியும் சட்டம், ரபேல் விமான பேர வழக்கு இதுவெல்லாம் இவர் நீதிபதியாக இருந்தபோது செய்தது.

 

அப்புறம், இவர் மீது பாலியல் வழக்கும் இருந்தது. எனவே உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு வழங்கப்பட்டுள்ள மாநிலங்களவை பதவியை வேண்டாம் என்ன சொல்லுவார் என்று நினைக்கிறேன். அப்படி இல்லை என்றால் அவர் நீதித்துறைக்கு அளவிட முடியாத சேதத்தை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் எனவும் சின்கா கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

இதே போல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், திரிணாமுல் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ரஞ்சன் கோகாய் நியமனத்தை எதிர்த்து விமர்சித்துள்ளன. அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான ஓவைய்சி கூறுகையில், ஒன்றுக்கு பதில் மற்றொன்று (quid Pro quo) என்ற ரீதியில் ரஞ்சன் சோகாய் நியமனம் உள்ளது என்று விமர்சித்துள்ளார்.


Leave a Reply