கொரொனா அச்சம்: சரியாக சாப்பிட்டு 10 நாட்கள் ஆகிவிட்டது

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Arrangemets


சரியாக சாப்பிட்டு பத்து நாட்கள் ஆகிவிட்டதாகவும் இதுவரை இந்திய தூதரக அதிகாரிகள் தங்களை தொடர்பு கொள்ளவில்லை எனவும் ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஈரானில் கொரோனா வைரஸ் அச்சுறுத்த வரும் நிலையில் அந்த நாட்டிற்கு மீன்பிடிக்க சென்ற சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

 

அவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு கூறிவரும் நிலையில் அங்கு சிக்கியுள்ள மீனவர்கள் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் கொரொனா வைரஸ் தொற்று அதிகம் இருப்பதால் தாங்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

 

பத்து நாட்களாக சரியாக உணவு வழங்கப்படவில்லை என கூறியுள்ள மீனவர்கள் இதே நிலை நீடித்தால் தாங்கள் மரணிக்கும் நிலை உருவாகும் எனவும் வேதனையை பதிவு செய்துள்ளனர்.


Leave a Reply