செல்ஃபியால் சிக்கிய செல்போன் கொள்ளையர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னையை அடுத்த குன்றத்தூரில் திருடிய செல்போனில் செல்பி எடுத்த கொள்ளையர்கள் காவல்துறையினரிடம் வசமாக சிக்கினார். இரண்டாம் கட்டளை பகுதியை சேர்ந்த மகேஷ் வீட்டிலிருந்து விலையுயர்ந்த 2 செல்போன்கள், கைகடிகாரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.

 

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், கொள்ளையர்கள் மகேஷின் செல்போனில் விதவிதமாக செல்பி எடுத்துள்ளனர். இந்த செல்ஃபி மகேஷின் இமெயிலுக்கு வரவே கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.


Leave a Reply