ரூ.2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தப்பட்டதா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு நிறுத்தப்பட்டதா என்ற கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் பதிலளித்தார். இதுதொடர்பாக மக்களவையில் பேசிய அவர், இதுவரை 7 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

 

இதில் ஐந்து லட்சத்து 49 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுக்கள் புழக்கத்திலும், 93 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் ரிசர்வ் வங்கி இருப்பாகவும் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

 

2019 மற்றும் 2020 ஆம் நிதியாண்டில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு தொடர்பாக அச்சகங்களுக்கு எந்த விண்ணப்பமும் முன்வைக்கப்படவில்லை என்று கூறிய அனுராக் தாகூர். ஆனாலும் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.


Leave a Reply