பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் அதிகரித்த மத்திய அரசு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பெட்ரோலிய பொருட்கள் மீதான உற்பத்திவரியை லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்த நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் நிறுவனங்கள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

 

ஆனால் சிறிய அளவிலேயே விலை குறைப்பின் மாற்றம் இருந்தது. சர்வதேச சந்தை நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலையை பெருமளவு குறைக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

 

இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலையை மீண்டும் உயர்த்தும் அளவிற்கு உற்பத்தி வரியை நிர்ணயிப்பதற்கு 3 ரூபாய் மத்திய அரசு அதிகரித்துள்ளது.


Leave a Reply