துப்பாக்கியுடன் பீட்சா டெலிவெரி! போலீஸ் கண்டதும் ஓட்டம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Arrangemets


அமெரிக்காவில் போலீஸாரை துப்பாக்கியால் சுட முயன்ற இளைஞரை போலீசார் சுட்டு பிடித்த வீடியோ வெளியாகியுள்ளது. வடக்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்த சேவியர் போரஸ் என்ற இளைஞர் பீட்சா டெலிவரி கொடுக்கும் வேலை செய்து வந்தார் .

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு பீட்சா  டெலிவெரி செய்ய ஒரு  வீட்டுக்கு சென்றபோது இடுப்பில் கைத்துப்பாக்கி வைத்துள்ளார். இதனை கண்ட வீட்டு உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க நிகழ்வு இடத்திற்கு வந்த காவல்துறையினர் கண்டு போரஸ் ஓட்டம் பிடித்தார்.

 

அவரை நிற்க சொல்லியும் துப்பாக்கியைக் கீழே போடும்படி போலீசார் பல முறை எச்சரித்தனர். ஒரு கட்டத்தில் எதிர்பாராதவிதமாக போலீசாரை நோக்கி துப்பாக்கியுடன் ஓடிவந்தான். இதனை கண்ட போலீசார் அவரை நோக்கி  சுட்டதில் அவர் படுகாயம் அடைந்தார் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.