--- --:--:-- --

பல்லடம் அருகே, புல் மப்பில் பஞ்சாயத்து தலைவர்களை மிரட்டி காசு பறிக்கும் அதிமுக கிளை செயலாளரின் அடாவடி!!

dasfgsdaf

திருப்பூர் பகுதியில் கிராம பஞ்சாயத்துகளில் நடைபெறும் பணிகளில் அது சரியில்லை.. இது சரியில்லை.. ஊழல் பண்றீங்க.. இதையெல்லாம் பத்திரிகைகளில் செய்தி வெளியிடுவேன் என்றெல்லாம் மிரட்டல், உருட்டல் விடுத்து பஞ்சாயத்து தலைவர்களிடம் அடாவடியாக பணம் பறித்து வருகிறார் அதிமுக கிளை செயலாளர் ஒருவர். இப்படி பல்லடம் ஒன்றியத்தில் ஒரு பஞ்சாயத்து தலைவரிடம் புல் மப்பில் கலாட்டா செய்த அந்த அதிமுக செயலாளர் வசமாக சிக்கிக் கொண்ட சமாச்சாரம் அம்பலமாகியுள்ளது.

 

பல்லடம் அடுத்த தேவராயம் பாளையத்தைச் சேர்ந்தவர் வரதராஜன். அந்த ஊர் அதிமுக கிளை செயலாளராக  இருந்து வருகிறார். இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமியின் தூரத்து சொந்தக்காரராம். ஆரம்பத்தில் பஞ்சாயத்துகளில் பிளம்பிங் வேலை, வாட்டர் பைப் லைன் வேலை என சின்னஞ் சிறு வேலைகள் பார்த்து வந்தவர். இதனால் பஞ்சாயத்துகளில் என்னென்ன மாதிரியெல்லாம் சுரண்டல் நடக்கிறது என்பதெல்லாம் இந்த வரதராஜனுக்கு அத்துபடி போலும்.

 

இதனால், பல்லடம் பகுதியில் உள்ள பஞ்சாயத்துகளில் சின்னச் சின்ன வேலைகள் எது நடந்தாலும் அங்கே ஆஜராகி விடுவாராம். எப்போதும் புல் மப்பில் தான் வலம் வருவாராம். கொசு மருந்து அடிக்கிறது சரியில்லை ..அது, இது என சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் , ஊராட்சி கிளார்க்குகளிடம் ஏகத்துக்கும் அலம்பல் செய்வது, மிரட்டல் விடுவது என எகிறுவாராம். கடைசியில் சம்திங்கை கட்டிங் (பணம்) வாங்கி விட்டு கட்டிங் (டாஸ்மாக் சரக்கு) அடிக்கப் போய் விடுவாராம்.

எப்போதும் புல் மப்பில்  வலம் வரும் (கட்டிங் ) வரதராஜன்
எப்போதும் புல் மப்பில் வலம் வரும் (கட்டிங் ) வரதராஜன்

இப்படியே தான் ஊர், ஊருக்கு சென்று பஞ்சாயத்ககளில் கட்டப் பஞ்சாயத்து செய்து காசு பார்ப்பதும் சரக்கு அடிப்பதுமாகவே வரதராஜன் இருந்து வந்துள்ளார். இப்போது பஞ்சாயத்து தேர்தல் நடந்து புதிய தலைவர்கள் பொறுப்பேற்று 2 மாதங்கள் தான் ஆகிறது. புதிதாக வந்தவர்களுக்கு இன்னும் பஞ்சாயத்துகளில் போதிய அனுபவம் பெறவில்லை என்பதை அறிந்து கொண்டு, ஆளும் கட்சி என்ற கோதாவில் அவர்களை கூடுதலாகவே மிரட்டல் விட ஆரம்பித்து விட்டாராம் அதிமுக கிளைச் செயலாளர் வரதராஜன்.

 

இப்படித்தான், பல்லடம் ஒன்றியம் இச்சிப்பட்டிகிராம ஊராட்சித் தலைவர் வேலுமணியிடம் நேற்று புல் மப்பில் சென்று தனது தில்லாலங்கடி வேலையை காட்டி உள்ளார். கொசு மருந்து அடிக்கிறது சரியில்லை.. மத்த எல்லா வேலையிலும் கோல்மால் நடக்கிறது. இதையெல்லாம் பத்திரிகையில் எழுதி அம்பலப்படுத்தி விடுவேன் என்றெல்லாம் பத்திரிகையாளர் வேடம் போட்டு எகிறலாக உளறிக் கொட்டியுள்ளார்.

 

அப்போது உண்மையான பத்திரிகையாளர் ஒருவர், பஞ்சாயத்து தலைவர் வேலுமணியை பார்க்கச் சென்றவர் இந்த கூத்தையெல்லாம் பார்த்து விக்கித்து போயுள்ளார். இதுதான் சாக்கு என பஞ்சாயத்து தலைவர் வேலுமணியும் நைசாக நழுவி,உண்மையான பத்திரிகை நண்பரிடம்,அதிமுக கிளைச் செயலாளர் வரதராஜனின் அலம்பல்களை கூறி புலம்ப அந்த இடமே ரசாபாசமானது.வரதராஜனை அங்கிருந்தவர்கள் எல்லாம் சகட்டுமேனிக்கு திட்டித் தீர்க்க, பதிலுக்கு வரதராஜனும் மப்பில் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் ஓவராக அலம்பல் சலம்பல் என ஏக ரகளை காட்டியுள்ளார்.

இச்சிப்பட்டிகிராம ஊராட்சி மன்றத் தலைவர் வேலுமணி
இச்சிப்பட்டிகிராம ஊராட்சி மன்றத் தலைவர் வேலுமணி

வரதராஜனின் இந்த அடாவடிகளையெல்லாம் பொறுக்க முடியாத ஒருவர் போலீசுக்கு போன் போடுங்கப்பா என்று சொன்னது தான் தாமதம்.. வரதராஜனின் போதை எங்கே போச்சு ? என்றே தெரியவில்லை என்று கூறுவது போல, ரகளையை மூட்டை கட்டிவிட்டு தப்பித்தால் போதும் என அந்த இடத்தை விட்டு ஒரே ஓட்டம் பிடித்து விட்டார்.

 

அரசியல் செல்வாக்கை வைத்துக் கொண்டு இப்படி வரதராஜன் போன்ற ஆசாமிகள், தங்கள் சுயலாபத்துக்காக கிளம்பி விட்டார்கள் போலும்.இவர்களை அம்பலப்படுத்தி அசிங்கப் படுத்தினாலும் திருந்தமாட்டார்கள் என்றே தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon