--- --:--:-- --

வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட வெள்ளை ஒட்டகச் சிவிங்கிகள்..!

9

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அரிதினும் அரிதாக காணப்பட்ட வெள்ளை ஒட்டகச் சிவிங்கிகள் வேட்டைக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கென்யாவில் கடந்த 2014ஆம் ஆண்டு தாய் ஒட்டகச் சிவிங்கிகள் அதன் குட்டியும் கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதையடுத்து சமூக வலைதளங்களில் பிரபலமான இந்த இரண்டு ஒட்டகச் சிவிங்கிகள் கடந்த சில மாதங்களாக காண முடியாததால் அவற்றைத் தேடும் பணி நடந்து வந்தது. இந்த நிலையில்தான் இரண்டு ஒட்டகச் சிவிங்கிகள் எலும்புத்துண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவற்றை வேட்டையாடிகள் கொன்றுள்ளதாகவும் வனவியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

தற்போது இந்த இனத்தின் ஒரே ஒரு ஆண் ஒட்டகசிவிங்கி மட்டுமே இருப்பதாக கூறும் அவர்கள் வெள்ளை ஒட்டகச் சிவிங்கிகள் வேட்டையாடப் பட்டது பழங்குடியினருக்கும், கென்ய அரசுக்கும் மிகப்பெரிய தலைகுனிவு என்று தெரிவித்திருக்கிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon