--- --:--:-- --

டெல்லியில் பெட்ரோல், டீசல் விலை குறைவு

15

வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக டெல்லியில் இன்று பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகமாக குறைந்துள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலை 2 ரூபாய் 69 காசுகள் குறைந்து லிட்டருக்கு 70 ரூபாய் 29 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

டீசல் விலை 2 ரூபாய் 33 காசுகள் குறைந்து, லிட்டர் 63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேசமயம் சென்னை உள்ளிட்ட இதர நகரங்களில் பெட்ரோல், டீசல் விலைகள் எந்த மாற்றமுமின்றி தொடர்கின்றன. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 73 ரூபாயாகவும், டீசல் 66 ரூபாய் 48 காசுகளாகவும் உள்ளது. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon