கொரானா பீதியால் சிக்கனுக்கு பதிலாக பலாக்காய் வாங்கும் மக்கள்!

கொரொனாவை தொடர்ந்து மட்டன், சிக்கன் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அவற்றுக்கு மாற்றாக பலாக்காயை மக்கள் வாங்க தொடங்கியுள்ளதாக காய்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். பலாக்காயை வைத்து செய்யப்படும் உணவு வகைகளின் ருசி இறைச்சி போல இருப்பதால் அதை உத்திர பிரதேச மக்கள் விரும்புவதாக கூறப்படுகிறது.

 

இதையடுத்து கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட விலை 120 ரூபாயாக உயர்ந்துவிட்டது. கோழிக்கறியால் கொரொனா பரவும் என்ற வதந்தி பரவியதையடுத்து சிக்கன் துண்டு மளமளவென்று சரிந்து கிலோ 80 ரூபாய் என்ற நிலையை எட்டியுள்ளது.


Leave a Reply