சாலையில் சிதறிய ஆப்பிள்கள்! உதவிய மக்கள்!
சீனாவில் அன்கோ மாகாணத்தில் கொரொனா வைரஸ் அச்சத்தில் நடைபெறும் நெகிழவைக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. பாசோ எனும் நகரத்தில் கார் ஒன்று முன்னால் சென்ற மூன்று சக்கர வாகனம் மீது மோதியது.
இதனால் அந்த மூன்று சக்கர வாகனத்தில் இருந்த ஆப்பிள்கள் அனைத்தும் சாலையில் விழுந்து சிதறி ஓடின. கொரொனா அச்சத்தின் காரணமாக ஆப்பிள்களை எடுத்துக் கொடுக்கக்கூட சாலையில் சென்ற பொதுமக்கள் யாரும் முன்வரவில்லை. சிறிது நேரத்தில் ஒருவர் மட்டும் முன் வந்து சாலையில் கிடந்த ஆப்பிள்களை எடுத்து மூன்று சக்கர வாகனத்தில் உள்ள கூடைகளில் போட தொடங்குகிறார்.
அவரை பார்த்த சாலையில் இருந்த மக்கள் சிலர் ஒவ்வொருவராக உதவ முன்வருகின்றனர். இறுதியில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் இணைந்து பெறும் 4 நிமிடங்களுக்குள் ஆப்பிள்கள் முழுவதையும் எடுத்து போக்குவரத்தை சரி செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




