வங்கித் தலைவர்களை நாளை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடவடிக்கை வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், வங்கிகளின் தலைவர்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை சந்திக்க உள்ளார்.

 

வங்கிகளின் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தின்போது இணைப்பு நடவடிக்கை எந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது குறித்தும் அதில் எழும் பிரச்சினைகள் குறித்தும் கருத்துகளை நிதியமைச்சர் கேட்டறிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக இணைக்க இந்த மாத தொடக்கத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கும் நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 

பிரதான வங்கிகளோடு இணையும் துணை வங்கிகளுக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்றும் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு மத்திய நிதியமைச்சர் அறிவுறுத்துவார் என கூறப்படுகிறது.


Leave a Reply