--- --:--:-- --

கேரளாவில் அடுத்ததாக குரங்குக் காய்ச்சல் ஒருவர் உயிரிழப்பு, 14 பேர் பாதிப்பு

2

கேரள மாநிலம் வயநாடு அருகே குரங்கு காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்த நிலையில், 14 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது. கேரளாவில் ஏற்கனவே பறவை காய்ச்சல், கொரொனா உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், தற்போது குரங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

 

வயநாடு அருகேயுள்ள மானந்தவாடி பகுதியில் வனத்தை ஒட்டி வசிப்பவர்களுக்கு இந்த நோய் பரவி வருகிறது. நாளுக்கு நாள் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போது 14 பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் மீனாட்சி என்பவர் இந்த காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கேரள அரசு சார்பில் காய்ச்சல் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

தமிழகத்தில் இந்த நோய் பாதிப்பு வராமல் தடுப்பதற்காக வனத்தை ஒட்டி வசிக்கும் மக்கள் மற்றும் வனத் துறை பணியாளர்களுக்கு குரங்கு காய்ச்சல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon