சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகாராஷ்டிராவை சேர்ந்தவருக்கு சிறந்த தாய்க்கான விருது வழங்கப்பட்டது. இந்த படத்தில் இருக்கும் சிறுவனின் பெயர் அக்னேஷ் .மற்ற சிறுவர்களைப் போல அல்லாமல் பிறவியிலேயே வளர்ச்சி குறைபாடு உடன் பிறந்தவர். இதனால் வளரும் போது பல இடர்களை சந்தித்த அவரை தடுக்க முன்வந்தார் ஐஐடி இளைஞரான ஆதித்ய திவாரி.
பூனேவை சேர்ந்த இவர் கடந்த 2014ஆம் ஆண்டு அக்னேசை தத்தெடுத்து வளர்க்க தொடங்கினார். ஆனால் ஆதித்ய திவாரியின் இந்த முயற்சிக்கு அவரது நலம் விரும்பிகள் மட்டுமல்லாமல் அரசாங்க விதியும் தடையாக இருந்தது. விதிகளின்படி ஒரு குழந்தையை பெண்ணால் மட்டுமே தத்து எடுக்க முடியும். இதனால் ஆதித்ய திவாரி பாதியில் முயற்சி தடைபட்டாலும் துவண்டு விடாத இவர் ஒன்றரை வருடம் போராடி தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
மற்ற சிறுவர்களை வளர்ப்பது போல் அல்லாமல் அக்னேசை வளர்க்க முடியாது எனக் கூறும் ஆதித்ய திவாரி அவனுக்காக சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக நல்ல சம்பளத்தில் அவர் பார்த்துவந்த வேலையையும் ஆதித்ய திவாரி தியாகம் செய்துள்ளார். ஒரு பெண்ணாலேயே குழந்தையை வளர்ப்பது கடினம். நீ எப்படி வளர்ப்பாய் இது நிச்சயம், முட்டாள்தனம் என விமர்சித்தவர்கள் பலர் ஆனால் தனது அன்பான பேச்சாலும் அரவணைப்பாலும் ஒரு தாயாக மாறியுள்ளார் ஆதித்ய திவாரி.
அவரது கடின முயற்சியின் பயனாக அக்னேசே தன்னை தந்தையாக ஏற்றுக் கொண்டதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றார் ஆதித்ய திவாரி. இவ்வாறு தற்போது மாற்றுத்திறனாளி ட குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என பல பெற்றோருக்கு கவுன்சிலிங்கும் வழங்கி வருகிறார் ஆதித்ய திவாரி. அதுமட்டுமில்லாமல் வளர்ச்சி குறைபாடு உடைய குழந்தைகளை வளர்ப்பது தொடர்பான மாநாட்டில் பேச ஆதித்திய திவாரிக்கு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
ஆதித்ய திவாரியின் இந்த சமூகப் பணியை அங்கீகரிக்கும் வகையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெங்களூருவை சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்த ஆண்டிற்கான சிறந்த தாய் என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது.