கொரோனா பாதிப்பால் சவுதி அரேபியாவில் வெறிச்சோடி காணப்படும் மெக்கா

கொரொனா வைரஸ் பரவல் காரணமாக சவுதி அரேபியாவிலுள்ள இஸ்லாமியர்களின் புனிதத்தலமான மெக்கா வெறிச்சோடி காணப்படுகிறது.

 

கொரொனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் மெக்கா மற்றும் மதினாவிற்க்கு உம்ரா மேற்கொள்வோர் சவுதி அரேபியாவிற்கு வர அந்நாட்டு அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. மேலும் வெளிநாட்டு பயணிகள் சவுதி அரேபியாவிற்கு வருவதற்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

இத்தகைய கட்டுப்பாடுகளால் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் மெக்கா தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மிகக் குறைவான அளவிலேயே பக்தர்கள் மக்காவிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர் .அவர்களும் முக கவசம் அணிந்து வலம் வருகின்றனர்.


Leave a Reply