க.அன்பழகன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்..! ஆணித்தரமாக பேரவையில் பேசியவர் என சபாநாயகர் புகழாரம்!!

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சட்டப்பேரவையில் ஆணித்தரமாக பேசி வாதங்களை எதிர்கொண்டவர் க.அன்பழகன் என சபாநாயகர் புகழாரம் சூட்டினார்.

 

பல்வேறு துறைகளின் மான்யக்கோரிக்கை மீதான விவாதங்களுக்காக தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. சட்டப்பேரவை கூடியவுடன் மறைந்த முன்னாள் எம்எல்ஏ சந்திரன் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

 

பின்னர் தற்போதைய சட்டப் பேரவையில் எம்எல்ஏக்களாக இருந்து சமீபத்தில் மறைந்த கே.பி.பி. சாமி, காத்தவராயன் மற்றும் 9 முறை எம்எல்ஏவாகவும், 4 முறை அமைச்சராகவும் இருந்த திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் ஆகியோரின் மறைவுக்கு சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது க.அன்பழகனுக்கு புகழாரம் சூட்டிப் பேசிய சபாநாயகர் ப.தனபால், மற்றவர்கள் வியக்கும் வகையில் ஆணித்தரமாக பேரவையில் பேசியவர் க.அன்பழகன். சபையில் விவாதங்கள் திசை மாறிச் சென்ற போதும் தனது கட்சியினரை பேச அனுமதிக்காதவர்கள் என க.அன்பழகனுக்கு சபாநாயகர் புகழாரம் சூட்டினார்.

 

இரங்கல் தீர்மானத்துக்குப் பிறகு க.அன்பழகன், கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோரின் மறைவுக்கு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சட்டப்பேரவை நாளை மறுநாள் கூடுகிறது.


Leave a Reply