--- --:--:-- --

“மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் பொறுத்துக்கொள்ள மாட்டேன்!” மதுரை பொதுக்கூட்டத்தில் “ஒரு வரியில்” கர்ஜித்த விஜயகாந்த்!!

a4903f73-1937-468e-98ec-18b5ae341eae

தமிழக மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என மதுரையில் நடந்த மகளிர் தின விழா பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரே ஒரு வரியில் பேசி பேச்சை முடித்தார்.

 

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக சார்பில் மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. உடல்நிலை சரியில்லாத பிறகு சென்னைக்கு வெளியே தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் என்பதால் பிரம்மாண்ட அளவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்தின் பேச்சை கேட்க ஏராளமான கட்சித் தொண்டர்களும் திரண்டிருந்தனர். இந்த விழாவில் விஜயகாந்த் மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர் .

 

விழாவில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய விஜயகாந்த் பேசுகையில், தமிழக மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என சிரமப்பட்டு ஒரு வரியில் மட்டும் பேசிவிட்டு அமர்ந்தார். இதனால் கேப்டனுக்கு இன்னும் பேச்சு சரியாகவில்லையே? மீண்டும் கர்ஜிப்பது எப்போது? என ஆதங்கப்பட்டனர்.

தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், 2021 தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்று விஜயகாந்த் முதல்வராக பொறுப்பேற்பார். அப்போது அனைத்து துறையிலும் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுப்பார். கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை தேறி வருகிறது. இனிமேல் பொதுக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்பார் என்றார்.

 

மேலும் அவர் பேசுகையில், டிக் டாக் செயலியை பெண்கள் பயன்படுத்தக் கூடாது இதனால் பல குடும்பங்களில் பிரச்சினை ஏற்படுகிறது. கொரானோ வைரஸ் சாதி, மதம் பார்க்காமல் அனைவருக்கும் பரவுகிறது .ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக சிலர் சாதி,மதத்தை பயன்படுத்துகின்றனர் என்றார்.

 

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய பிரபாகரன், கேப்டன் முதல்வரானால் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்துவார். இப்போதே அந்த திட்டங்களைப் பற்றி கூறினால், அடுத்த மாநில முதல்வர்கள் காப்பியடித்து விடுகின்றனர் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon