கொரோனா வைரஸ் வதந்திகள் குறித்து கவுண்டமணி செந்தில் காமெடி வீடியோ வெளியிட்ட போலீஸ்
கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்ப கூடாது என்பதை உணர்த்தும் வகையில் மதுரை மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. மதுரை காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ தான் இது. கொரோனா வைரசை விட அது தொடர்பான வதந்திகள் அதிவேகமாக பரவி வருகின்றன.
அப்படித்தான் மதுரை திருமங்கலத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உருவாகியுள்ளதாகவும், அதனால் யாரும் திருமங்கலம் செல்ல வேண்டாம் என்றும் வதந்திகள் பரவின வாட்ஸ்அப் குரூப் களிலும் சமூக வலைதளங்களிலும் இந்த வதந்தி பரவியதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காவல்துறையினர் நகைச்சுவை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
செந்தில், கவுண்டமணி நடித்த காலரா குறித்த நகைச்சுவை காட்சி அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ள காவல்துறை இதுபோன்ற புரளிகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. வீடியோவின் பக்கத்தில் வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட காவல் துறையின் இந்த முயற்சிக்கு பாராட்டு கிடைத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




