--- --:--:-- --

5வது நாளாக காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தால் முடங்கியது நாடாளுமன்றம்…!

3

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றம் ஐந்தாவது நாளாக முடங்கியது. மக்களவை இன்று காலை கூடியதும் காங்கிரஸ் மற்றும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதியில் கூடி டெல்லி வன்முறை தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்.

 

மேலும், அவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் எனவும் முழக்கமிட்டனர். அவை நடத்திக்கொண்டிருந்த கீர்த்தி சோலங்கி உறுப்பினர்களை இருக்கைக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டார். எனினும் அமளி நீடித்ததால் அவை இரு முறை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோதும் அமளி தொடர்ந்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

 

மாநிலங்களவை கூடியதும் பேசிய அவை தலைவர் வெங்கையா நாயுடு மகளிர் தின வாழ்த்து தெரிவித்ததோடு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிக்கையை பல ஊடகங்கள் சரியாக வெளியிடவில்லை என வேதனை தெரிவித்தார். இந்நிலையில் டெல்லி வன்முறை தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

 

கடந்த திங்கள்கிழமை கூடிய நாடாளுமன்றம் தொடர் அமளி காரணமாக ஐந்தாவது நாளாக முடங்கியுள்ளது. கோலி பண்டிகை விடுமுறைக்கு பிறகு மார்ச் 11ஆம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனிடைய எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காந்தி சிலை முன்பு நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon