காணாமல் போன தந்தையை டிக்டாக் மூலம் கண்டுபிடித்த மகன்!
குடும்ப சண்டையால் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய தந்தையை டிக்டாக் மூலம் கண்டுபிடித்து மகன் வீட்டிற்கு அழைத்து வந்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. கர்நூல் மாவட்டம் நந்தியாவை சேர்ந்த புள்ளையா என்பவர் குடும்ப சண்டையால் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அவரது நிலை குறித்து தெரியாமல் குடும்பத்தினர் தவித்து வந்த நிலையில் மகன் நரசிம்மலு காணாமல் போன தந்தையின் புகைப்படத்துடன் அவரை எண்ணி உறுத்தலாக திட்டாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த புள்ளையா டிக்டாக் மூலமே மகனுக்கு பதிலளித்துள்ளார்.

இதையடுத்து குஜராத் சென்ற நரசிம்மலு தந்தையை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். டிக் டாக்கால் வரும் சீரழிவுகளை மட்டுமே கேள்விப்பட்டு வந்த நிலையில் அதன் மூலம் காணாமல் போன தந்தையை மகன் மீட்டெடுக்கும் சம்பவமும் அரங்கேறி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




