குடிநீர் குழாயில் சாயக்கழிவு நீர்… அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

திருப்பூர் பாளையக்காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குடிநீர் குழாயில் சாயக்கழிவு கலந்து வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் ஆய்வு செய்ததையடுத்து இணைப்பை மாற்றியமைக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

 

முக்கியமான குழாயிலிருந்து சாக்கடை கால்வாய் வழியாக பகிர்மானக் குழாய் போவதால் அதில் ஏதாவது உடைப்பு ஏற்பட்டு இருந்திருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் முறைகேடாக செயல்படும் சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply