அசால்ட்டாக பிட் பேப்பரை அளிக்கும் மாணவர்களின் நண்பர்கள்
மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மதில் சுவர் ஏறி அவர்களது நண்பர்கள் பிட் பேப்பர் வழங்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
கியாவத்வால் மாவட்டத்தில் மகாகோன் பகுதியில் ஜில்லா பரிஷத் எனும் மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நேற்று பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. காலையில் அந்த பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுத ஆரம்பித்தபோது அவர்களின் நண்பர்கள் பள்ளியின் சுற்றுச் சுவரில் ஏறி விடைத்தாள் எழுதிய தாளை அதாவது பிட் பேப்பரை ஜன்னல் வழியாக எறிந்தனர்.
இந்த காட்சியை அந்த வழியாக சென்ற யாரோ வீடியோவாக வெளியிட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




