--- --:--:-- --

சர்ச்சையான ட்ரம்ப்பின் தவறான கருத்துகள்!

3

இந்தியா வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய மக்கள்தொகை குறித்தும், இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறித்தும் தவறான தகவல்களை கூறியிருப்பது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் சீன மக்கள் தொகையை விட, இந்திய மக்கள் தொகை அதிகம் என குறிப்பிட்டு பேசினார். சீனாவின் மக்கள் தொகை 143 கோடி இந்தியாவில் வெறும் 137 கோடி மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். இந்நிலையில் இந்திய மக்கள் தொகை குறித்து தவறான கருத்துக்களை பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இதேபோல் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் தான் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக அதிபர் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடி 4 லட்சமாக இருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை தற்போது 20 கோடியாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

 

இந்தியாவில் கடந்த 1951 ஆம் ஆண்டு 2 கோடியே 54 லட்சம் இஸ்லாமியர்கள் இருந்துள்ளனர். இந்தியாவில் இரண்டு கோடிக்கும் குறைவான இஸ்லாமியர்களே இருந்ததில்லை. இந்நிலையில் டிரம்ப் வெறும் ஒரு கோடி சாமியார்கள் தான் இருந்தனர் என்று குறிப்பிட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா அதிபர் டிரம்ப் இந்தியர்கள் குறித்தும், இஸ்லாமியர்கள் குறித்தும் தவறான தகவலை வழங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon