--- --:--:-- --

சி‌ஏ‌ஏ போராட்டகளத்தில் இந்து பெண்ணுக்கு வளைகாப்பு விழா நடத்திய இஸ்லாமிய பெண்கள்

2

வண்ணாரப்பேட்டையில் 13 ஆவது நாளாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஹிந்து பெண்ணுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் பலம் . அங்கு சாதியை தாண்டிய மனிதன் என்ற உணர்வு வெளிப்படுவது புதிதல்ல அப்படிப்பட்ட நிகழ்வுதான் சென்னை வண்ணாரப்பேட்டையிலும் அரங்கேறியுள்ளது.

 

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்ட களத்தில் நடந்த நிகழ்வுதான் இது. இந்து-முஸ்லிம் சகோதரத்துவத்தை போற்றும் வகையில் இந்து பெண்ணுக்கு வளைகாப்பு நடத்தி ஆசீர்வதித்து உள்ளனர் இஸ்லாமிய பெண்கள்.

 

சென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்துவரும் விக்னேஷ் என்பவரது மனைவி பாக்கியலட்சுமிக்கு ஒன்பதாவது மாதம் வளைகாப்பு விழாவானது போராட்ட களத்தில் நடைபெற்றது. தம்பதிக்கு இஸ்லாமியர்கள் அனைவரும் பூமாலை மற்றும் வளையல்கள் அணிவித்து வாழ்த்தினர்.

 

வளைகாப்போடு நில்லாமல் சி‌ஏ‌ஏவிற்கு எதிராகவும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் அச்சிடப்பட்டிருந்த வாசகங்கள் அடங்கிய தாம்பூலப்பை வழங்கப்பட்டது. அப்போது மேடையில் பேசிய தம்பதியினர் இந்து-முஸ்லிம் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த முயற்சியை தான் செய்திருப்பதாகவும் ஒருபோதும் இந்து-முஸ்லீம் சகோதரத்துவத்தை யாராலும் பிரிக்க முடியாது என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

 

குடியுரிமை திருத்த சட்டமானது வாபஸ் பெறாவிட்டால் இந்த போராட்ட களத்தில் தன்னுடைய குழந்தையுடன் வந்து போராட போவதாக தம்பதியினர் தெரிவித்தனர். என்ன நடந்தாலும் தாங்கள் இங்கே சகோதரர்கள் என பாடம் புகட்டி உள்ளனர் இந்த தம்பதி.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon