பூமியில் ஆக்சிஜன் இன்றி உயிர் வாழும் முதல் உயிரினத்தை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து உயிரினங்களிலும் காற்று சுவாசம் நடைபெறுவதாக நம்பப்படும் நிலையில், இஸ்ரேலின் டெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆக்சிஜன் இன்றி உயிர் வாழும் ஒட்டுயிரியை கண்டுபிடித்துள்ளனர்.
மீனின் தசை செல்களில் உயிர்வாழும் ஜெல்லி மீன் போன்று அந்த ஹெனிகுவா சால்மிணிகோலா என பெயரிடப்பட்டுள்ளது. அதில் செல்களின் ஆற்றல் நிலையமான மைட்டோகாண்ட்ரியா இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைட்டோகாண்ட்ரியா பல செல் உயிரிகளில் ஆக்ஸிஜனை வேதி ஆற்றலாக மாற்றும் தலையாய பணியைச் செய்வதால் காற்று சுவாசத்திற்கு முக்கியமானதாகும். இந்த நிலையில் அந்த அமைப்பு இல்லாத உயிரியை கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.