உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாட்கள் பயணம்..!
பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு நாளை பயணம் மேற்கொள்ள உள்ளார். உஸ்பெகிஸ்தான் அதிபர் மிர்ஜியோயேவ் அழைப்பின்பேரில், அந்நாட்டுக்கு பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக நாளை செல்கிறார். அங்கு பிரதமர் மோடி அதிபர் மிர்ஜியோயேவை சந்தித்து உயர் மட்ட ஆலோசனை நடத்த உள்ளார்.
வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி, கல்வி மற்றும் மக்கள் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 26 ஆவது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, நாளை மறுநாள் கிர்கிஸ்தான் நாட்டுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.
உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றும் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசிக்க உள்ளார். இரு நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வரும் ஒன்றாம் தேதி பிரதமர் மோடி இந்தியா திரும்புகிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





