--- --:--:-- --

நேபாள வெள்ளப் பெருக்கு: உயிரிழப்பு 626 ஆக உயர்வு : 2,426 பேரைக் காணவில்லை

6

நேபாள வெள்ளப் பெருக்கு பலி எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,451 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன 2,426 பேரையும், மீட்புப் பணியில் ஈடுபட்டு காணாமல் போன 27 காவலர்களையும் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழர்கள் பாதுகாப்பாக டெல்லி வழியாக சென்னை திரும்பியுள்ளனர். டெல்லியில் உள்ள மத்திய அரசும் தமிழக அரசும் இணைந்து பிற தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon