--- --:--:-- --

ஆன்லைன் வழிக்கல்வி மூலம் குட்டி சாட்டிலைட்டை உருவாக்கி அசத்திய டேனிஷ்கான்!

6

நவீன தொழில்நுட்ப உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இணையத்தை பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அது சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் 12 வயது சிறுவனை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் டேனிஷ்கான் இணையதளத்தில் உதவியோடு கலாம் சேட் லைட்டை மாதிரியாகக் கொண்டு மைக்ரோ இன்னர் ஆர் பிக்சர்ஸ் என்ற மிகச்சிறிய சேட்டிலைட்டை உருவாக்கியுள்ளார். இந்த சாட்டிலைட்டிற்க்கு ஹதீப்சார் என பெயரிட்டு இருக்கும் அவன் தனது தாத்தாவின் மீதுள்ள பாசத்தால் இந்த பெயரை சூட்டி இருப்பதாகக் கூறிவருகிறார்.

 

மேலும் தன்னுடைய கண்டுபிடிப்பு குறித்த விளக்கங்களை நாசாவிற்கு அனுப்பி விட்டதாகவும் அவர்கள் அதற்கு பதில் தந்து இருப்பதாகவும் கூறுகிறார். இது மட்டுமில்லாமல் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் கருவியையும் அவர் வடிவமைத்துள்ளார்.

 

தன்னுடைய கண்டுபிடிப்புகளுக்கு தேவையான பாகங்கள் அனைத்தும் ஆன்லைனிலேயே கிடைக்கின்றன என கூறும் சிறுவன் வாட்ஸ்அப் லிங்க் உள்ளிட்ட வலைதளங்கள் மூலமாக அறிவியல் ஆய்வாளர்கள் உடன் கலந்துரையாட முடிகிறது என்றும் சி பிளஸ் பிளஸ், ஜாவா உள்ளிட்ட பல கணினி மொழிகளை ஆன்லைனிலேயே பயின்று வருவதாகவும் கூறுகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon