--- --:--:-- --

தெக்கலூர் ஊராட்சியில் நடக்கும் ரூர்பன் திட்ட பணிகள்; மாநில ஊரக வளர்ச்சிதுறை இயக்குனர் கே.எஸ் பழனிச்சாமி திடீர் ஆய்வு

1

தமிழகத்தில் நகர்புறத்திற்கு இணையான வசதிகளை கிராம பகுதியில் மேம்படுத்த மத்திய அரசு ரூர்பன் திட்டத்தை அறிமுக படுத்தி கிராமங்களை செழுமையாக்கி வருகிறது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தெக்கலூர் ஊராட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சாலை பணிக்கு ரூ 35 லட்சமும், சோலார் மின்கட்டமைப்பு பணிக்கு ரூ 10 லட்சமும் ஒதுக்கி, தற்போது அப்பணிகள் நடைபெற்று வருகிறது.

 

இந்தநிலையில் சென்னையில் இருந்து மாநில ஊரக வளர்ச்சி.துறை இயக்குனர் கே.எஸ் பழனிச்சாமி தெக்கலூர் ஊராட்சிக்கு வந்து ரூர்பன் திட்டம் நடைபெறும் பணிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். தெக்கலூர் ஊராட்சியில் சேலம் – கொச்சி செல்லும் சாலை முதல் வடுகபாளையம் வரை போடப்படும் சாலை மேம்பாட்டு பணியை ஆய்வு செய்தார். பின்னர் தெக்கலூர், காமநாயக்கன்பாளையம். சோலார் மின்கட்டமைப்பை பார்வையிட்டு, அதன் பயன்பாடுகள் சேமிப்பு விபரங்களை மற்றும் செலவினம் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ், அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிஹரன், பொறியாளர்கள் கணேசன், கோகுல், தெக்கலூர் ஊராட்சி தலைவர் மரகதமணி மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon