--- --:--:-- --

இனி வாட்ஸ் ஆப் மூலம் சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்!

8

சமையல் எரிவாயு சிலிண்டரை வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அதன் தமிழகம் மற்றும் புதுச்சேரி செயல் இயக்குனர் ஜெயதேவன் வாடிக்கையாளர்கள் பதிவு செய்த மொபைல் போனில் இருந்து 7 5 8 8 8 8 8 8 2 4 என்ற எண்ணுக்கு தகவல் அனுப்பி முன்பதிவு செய்யலாம் என தெரிவித்தார்.

 

எடை கட்டணம் உள்ளிட்டவை தொடர்பாக குறுஞ்செய்தியில் அனுப்பப்படும் லிங்க் மூலமும் இந்தியன் ஆயில் நிறுவன இணையதளத்திலும் வாடிக்கையாளர்கள் புகார் அளிக்கலாம் என்று அவர் கூறினார். சிலிண்டர் மானிய தொகை விவரம் விரைவில் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

 

வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் சென்னையில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்றும், மின்சார வாகனங்களுக்கு பேட்டரி சார்ஜ் மையங்கள் சென்னையில் 3 இடங்களில் அமைக்கப்பட்ட இருப்பதாகவும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon