ஆசிரியை கே.வி. ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது கே.வி ஜெயஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த ஜெயஸ்ரீ ஆசிரியராக பணிபுரிந்தவர். இவர் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற நாவலுக்கு இது சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாணர்கள் மற்றும் நடன கலை புரியும் கூத்தர்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொண்ட சம்பவங்களை மையமாக, மையக்கருவாக கொண்டு உருவாகிய இந்த நாவலுக்கு சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாடமி விருது கிடைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.


Leave a Reply